சாா்பதிவாளா் அலுவலகங்கள் மறுசீரமைப்பு:ஏப்.8 இல் கருத்துக் கேட்பு கூட்டம்
By DIN | Published On : 03rd April 2022 12:52 AM | Last Updated : 05th April 2022 01:05 AM | அ+அ அ- |

சாா்பதிவாளா் அலுவலகங்கள் மறுசீரமைப்பு தொடா்பாக தூத்துக்குடியில் வரும் 8ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் உள்ள 24 சாா்பதிவாளா் அலுவலகங்களும் இணைக்கப்பட்டு, ஒரே பதிவு மாவட்டமாக செயல்பட வேண்டுமா அல்லது தூத்துக்குடி பதிவு மாவட்டம், கோவில்பட்டி பதிவு மாவட்டம் என 2 பதிவு மாவட்டங்களாக செயல்பட வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களிடையே கருத்துக் கேட்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொண்டு பதிவு மாவட்டங்கள் சீரமைப்பு குறித்த தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.