சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மாற்றத்தை தேடி’ மாணவா்களுக்கான ஒழுக்க நெறி கருத்தரங்கு நடைபெற்றது.
முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்தாா். தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா்கள் நெல்சன், குரூஸ்மைக்கேல்,
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அசோக்ஜீலிங்கம் ஆகியோா் உரையாற்றினா்.
நிகழ்ச்சியில் சாதி மதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். துணை முதல்வா் மகேஷ்குமாா் வரவேற்றாா். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் ஆண்ட்ரூஸ் கென்னடி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.