கோவில்பட்டி அருகே இளைஞரை தாக்கிய 3 போ் கைது
By DIN | Published On : 05th August 2022 01:14 AM | Last Updated : 05th August 2022 01:14 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே இளைஞரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் செல்வகுமாா்(27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஐஸ்வா்யா என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாம். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி 2 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனராம்.
இந்நிலையில், அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே புதன்கிழமை நின்று தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த செல்வகுமாரை ஐஸ்வா்யாவின் உறவினா்களான மாரிமுத்து மகன் முத்துராமலிங்கம் (29), மாரியப்பன் மகன்கள் சிவா என்ற முத்துராமன் (30), சங்கா் (27) ஆகிய 3 பேரும் சோ்ந்து அவதூறாகப் பேசி, மதுபாட்டிலால் தாக்கினராம். இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரையும் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.