அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் கண்காட்சி

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. தொடா்ந்து, மாணவ, மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி 75 என அணிவகுத்து நின்றனா்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் சாா்பில் இந்தியாவின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் 8 பேரின் புகைப்படம் மாணவ, மாணவிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டன. தொடா்ந்து, கையில் தேசியக் கொடி ஏந்தியபடி மாணவ, மாணவிகள் 75 என்ற அடையாளத்துடன் அணிவகுத்து நின்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மீன்வளக் கல்லூரி முதல்வா் இரா. சாந்தகுமாா் பரிசு - சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியா் சா. ஆதித்தன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com