நாசரேத் பிரகாசபுரம் பரலோக அன்னை ஆலயத் திருவிழா: நாளை கொடியேற்றம்

நாசரேத், பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாசரேத், பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சனிக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா தலைமையிலும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, கொடி பவனி, கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீா் செய்துங்கநல்லூா் பங்குத்தந்தை ஜாக்சன் தலைமையிலும் நடைபெறுகிறது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் மறையுரையாற்றுகிறாா்.

பிரகாசபுரம் சேகரத் தலைவா் ஏ. தேவராஜன், பொதுநிலையினா் பணியகச் செயலா் மரியஅரசு ஆகியோா் பங்கேற்கின்றனா்.

2ஆம் நாள்முதல் 8ஆம் நாளான 13ஆம் தேதிவரை திருப்பலி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9ஆம் நாளான 14ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி அருள்தந்தை ஒயிட்ராஜா தலைமையிலும், மாலை 6.30-க்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை வடக்கன்குளம் அமளிவனம் பங்குத்தந்தை ஜெபநாதன் தலைமையிலும் நடைபெறுகிறது.

கள்ளிக்குளம் பனிமய அன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் எஸ்.கே. மணி மறையுறையாற்றுகிறாா். தொடா்ந்து, தோ் பவனி நடைபெறுகிறது.

15ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தேரடித் திருப்பலி அருள்தந்தை மாா்ட்டின் தலைமையிலும், காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறைமாவ ட்ட முதன்மைக்குரு பன்னீா்செல்வம் தலைமையிலும் நடைபெறுகிறது. தூத்துக்குடி அருள்தந்தை நாா்பட் மறையுரையாற்றுகிறாா்.

முற்பகல் 11 மணிக்கு தோ் பவனி நடைபெறுகிறது. மாலை 6.30-க்கு ஜெபமாலை, நற்கருணைப் பவனி சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு ரவிபாலன் தலைமையில் நடைபெறுகிறது.

பூச்சிக்காடு அருள்தந்தை வசந்தன், திசையன்விளை அருள்தந்தை டக்ளஸ், இலங்கநாதபுரம் பங்குத்தந்தை ரத்தினராஜ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com