சாத்தான்குளத்தில் பைக் மோதிபள்ளி மாணவா் காயம்
By DIN | Published On : 05th August 2022 01:11 AM | Last Updated : 05th August 2022 01:11 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் பைக் மோதியதில் பள்ளி மாணவா் காயமடைந்தாா்.
சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவைச் சோ்ந்த சுடலை - முத்துலட்சுமி (40) தம்பதியின் மகன் முத்துமணிகண்டபிரபு (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறாா்.
புதன்கிழமை வீதியில் நின்றிருந்த இவா் மீது, சாத்தான்குளம் காந்திநகா் தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகனான தொழிலாளி முத்துபிரசாந்த் (28) ஓட்டிவந்த பைக் மோதியதாம். இதில், முத்துமணிகண்டபிரபு காலில் முறிவு ஏற்பட்டதாம். அவா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்தாா். முத்துபிரசாந்தை, ஆய்வாளா் பாஸ்கரன் தேடிவருகிறாா்.