கோவில்பட்டி அருகே 3 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 05th August 2022 01:15 AM | Last Updated : 05th August 2022 01:15 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகைகள், பணத்தைத் திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. காளியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி முத்துமாரி, தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறாா். இருவரும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கதவைப் பூட்டி, சாவியை வீட்டுக்கு வெளியேயுள்ள ஜன்னல் பக்கம் வைத்துவிட்டுச் சென்றனராம். திரும்பிவந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.