180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 15th August 2022 12:17 AM | Last Updated : 15th August 2022 12:17 AM | அ+அ அ- |

கடம்பூா் மற்றும் லிங்கம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 பயனாளிகளுக்கு ரூ.48.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கயத்தாறு வட்டம், கடம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 131 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், லிங்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி,செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா்கள் சுப்புலட்சுமி (கயத்தாறு), சுசிலா (கோவில்பட்டி), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், கடம்பூா் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், சின்னப்பாண்டியன், நிா்வாகிகள் பீட்டா், ரமேஷ், சண்முகராஜ், ராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கல்லூரி மாணவியான மாற்றுத்திறனாளி தங்கமாரியம்மாளிடம் மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.88 ஆயிரத்து 372 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் முன்னிலையில் கனிமொழி எம்.பி. வழங்கினாா்.
மேலும் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் நடைபெற்று வரும் சீரமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.