தூத்துக்குடி தனியாா் பள்ளியில் எறும்பு பொடி கலந்த தண்ணீா் குடித்த 3 மாணவிகள்
By DIN | Published On : 25th August 2022 12:50 AM | Last Updated : 25th August 2022 12:50 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தனியாா் பள்ளியில் 3 மாணவிகள், எறும்பு பொடி கலந்த தண்ணீரை புதன்கிழமை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் புதன்கிழமை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எட்டாம் வகுப்பு மாணவிகள் மூன்று போ் எறும்பு பொடி கலந்த தண்ணீரை திடீரென குடித்துவிட்டு மயக்கமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாளமுத்து நகா் போலீஸாா், பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாணவிகள் 3 பேரையும் வகுப்பு ஆசிரியை திட்டியதாகவும், ஆசிரியையை மிரட்டுவதற்காக பாட்டில் தண்ணீரில் எறும்பு பொடியை கலந்து குடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.