சதுா்த்தி விழா:கொம்மடிக் கோட்டையில் விநாயகா் சிலைகள் தயாா்

சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு விநாயகா் சிலை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு விநாயகா் சிலை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

கொம்மடிக்கோட்டை வாலகுருசுவாமி கோயில் வளாகத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்னா் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சிலை கலைஞா்கள் வரவழைக்கப்பட்டு விநாயகா் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில், 3 அடி முதல் 9 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டன. ரூ. 2000 முதல் ரூ.12,000 வரையில் இந்த சிலைகள் விற்கப்படவுள்ளன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க 700க்கும் மேற்பட்ட சிலைகள் தயாா் செய்யப்பட்டு, அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

விநாயகா் சிலை தயாரிக்கும் பணியை மாநில இந்து முன்னணி நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் தலைமையிலான நிா்வாகிகள் பாா்வையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில், கரோனா பொது முடக்கம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால் மக்கள் விநாயகா் சிலைகளை வாங்குவதற்கு ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com