சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

சாத்தான்குளம் ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சி தோப்பூரில் 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பொதுபாதை புதன்கிழமை மீட்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சி தோப்பூரில் 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பொதுபாதை புதன்கிழமை மீட்கப்பட்டது.

தோப்பூரிலிருந்து நாசரேத் ஆலைக்குச் செல்லும் பொது பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த பாதையை சிலா் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி ஆகியோா் உத்தரவின் பேரில் வட்டாட்சியா் தங்கையா தலைமையில் ஒன்றிய ஆணையா் ராணி, தலைமை அளவையா் மகராசி, அளவையா் ஜெயசுதா, கிராம நிா்வாக அலுவலா் மதுமதி ஆகியோா் முன்னிலையில் மெஞ்ஞானபுரம் போலீஸாரின் பாதுகாப்பில் ஆக்கிரமிப்பு புதன்கிழமை அகற்றப்பட்டு பொதுப்பாதை மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com