கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரி நிறுவனா் தின விழா
By DIN | Published On : 25th August 2022 12:49 AM | Last Updated : 25th August 2022 12:49 AM | அ+அ அ- |

கோவில்பட்டி கோ.வெங்கடாசுவாமி நாயுடு கல்லூரியின் நிறுவனா் தினவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) சாந்திமகேஸ்வரி நிறுவனா் தினம் குறித்துப் பேசினாா். கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி, வட்டாரக் கல்வி அலுவலா் கணேசன், கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஒரிஸா மாநிலம் கட்டாக்கில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியுமான பிரகாஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மகேஷ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
அதில் வெற்றி பெற்றவா்களுக்கு இலக்குமி ஆலை முதன்மை பொது மேலாளா் ராதாகிருஷ்ணன், ஆசிரியை மங்களேஸ்வரி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் வீரலட்சுமி வரவேற்றாா். வேதியியல் துறைத் தலைவா் உமாதேவி நன்றி கூறினாா்.