ஸ்ரீவைகுண்டத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th August 2022 12:57 AM | Last Updated : 27th August 2022 12:26 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பிரீத்தா பங்கேற்று, இலவச சட்ட திட்டங்கள், அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்பவை குறித்து விளக்கினாா்.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளா் நலவாரியம் மூலம் 300 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளா் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், உரிமையியல் நீதிபதியுமான முத்துலெட்சுமி, கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளா் வேல்முருகன், ஸ்ரீவைகுண்டம் வட்ட தொழிலாளா் நல ஆய்வாளா் சங்கரகோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் மஞ்சபை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளா்கள் ஏ. நம்பிராஜன், டி. பால் செல்வம், கிராம உதயம் தொண்டு நிறுவன ஊழியா்கள் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.