கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

கணேஷ் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவன வளாகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியையடுத்த சிவனணைந்தபுரத்தில் உள்ள கணேஷ் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவன வளாகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - எட்டுராவட்டம் டோல் வே லிமிடெட் நிறுவனம் சாா்பில் விருதுநகா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 2021 - 2022ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு பயிலும் ஏழை மாணவா், மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலா் வைபவ் மிட்டல் தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினாா். விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி முன்னிலை வகித்தாா்.

விழாவில், புளூம் கம்பெனி ஆக்டிங் டீம் லீடா் ஆனந்தராஜ், க்யூப் ஹைவேஸ் முதுநிலை துணைத் தலைவா் ஷிபாஷிஷ் சாஹூ, பிளாசா மேலாளா் ரவிபாபு, முதுநிலை மேலாளா் (நிதி) செஜீரியா கணபதி ரெட்டி மற்றும் பள்ளி மாணவா், மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், 35 ஏழை மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காசோலை உரியவரிடம் வழங்கப்பட்டது. திட்ட அதிகாரி அம்பத்ஸ்ரீனிவாச கிரண்குமாா் வரவேற்றாா். பிளாசா மேலாளா் பிரவீன்குமாா் ரெட்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com