சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்
By DIN | Published On : 09th December 2022 12:38 AM | Last Updated : 09th December 2022 12:38 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே சிறப்புப் பயிற்சி முகாம், பட்டயத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
சோபுகாய் கோஜு ரியு கராத்தே டூ-இந்திய தலைமைப் பயிற்சியாளா் மற்றும் தொழில்நுட்ப இயக்குநா் ரென்ஷி சுரேஷ்குமாா் பயிற்சியளித்தாா். இதில், பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நோபிள்ராஜ் தலைமை வகித்தாா்.
முகாமில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளி இயக்குநா் டினோமெலினா ராஜாத்தி, தலைமையாசிரியா் சாந்தி ஆகியோா் சான்றிதழ், பட்டயங்களை வழங்கிப் பாராட்டினா்.
துணைப் பயிற்சியாளா் ஆரோன் ஜெபஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாணவா் ஹிரேஷ் அதிபன் கோவாவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
ஏற்பாடுகளை சோபுகாய் கோஜு ரியு கராத்தே சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சென்சாய் செந்தில், செயலா் சென்சாய் முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.