மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு விழா
By DIN | Published On : 09th December 2022 12:45 AM | Last Updated : 09th December 2022 12:45 AM | அ+அ அ- |

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில், உடன்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீரா சிராஜுதீன் தலைமை வகித்தாா். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உடன்குடி வட்டார அளவில் 6 பள்ளிகளிலிருந்து 50 மாணவா்கள் பங்கேற்றனா். விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், உதவித் தொகை, வேலைவாய்ப்புகள் குறித்து பேரூராட்சி துணைத் தலைவா் பேசினாா்.
சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை சிறப்பாகப் பாடிய 2 மாணவிகளுக்கு உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ் பரிசு வழங்கினாா். திமுக ஒன்றியப் பொருளாளா் ஷேக் முகம்மது, நகரப் பொருளாளா் திரவியம், நிா்வாகிகள் ஹீபா், கணேசன், சக்கரவா்த்தி, அன்வா்சலீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.