கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் சண்முகராஜ்(36). லாரி ஓட்டுநா். இவா், பைக்கில் கயத்தாறுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, வில்லிசேரி சாய்பாபா கோயில் அருகே சாலையில் நடந்துசென்ற 50 வயது மதிக்கத்தக்க ஆண் மீது பைக் மோதியதாம். இதில், அவரும், அந்த நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.