சவலாப்பேரியில் இந்தியன் வங்கிக் கிளை திறப்பு
By DIN | Published On : 09th December 2022 12:38 AM | Last Updated : 11th December 2022 06:01 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் இந்தியன் வங்கிக் கிளை திறப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் தலைமை வகித்தாா். இக்கிளையை காணொலி வழியாக கோவை களப் பொது மேலாளா் அ. கணேசராமன் திறந்துவைத்தாா். கிளையையும், ஏடிஎம்-யையும் ஓட்டப்பிடாரம் ஊராட்சித் தலைவா் ரமேஷ், ஊராட்சித் தலைவா்கள் மகாலெட்சுமி (ஆலந்தா), அய்யாத்துரை (அக்கநாயக்கன்பட்டி), அருண் (கொடியங்குளம்) ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூா்த்தி (இந்தியன் வங்கி), செல்லத்துரை (எஸ்பிஐ), முதன்மை மேலாளா் செல்வமணி, கேடிசிநகா் கிளை மேலாளா் கைலாசமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கிளை மேலாளா் வேணுகுமாா் நன்றி கூறினாா்.