தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:35 AM | Last Updated : 09th December 2022 12:35 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவா் எஸ்.அருணாசலம் தலைமை வகித்தாா். மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆ
ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். அப்போது, பூத் கமிட்டி அமைத்து தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கடந்த தோ்தலை விட அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளா் உமரி ஷங்கா், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பிரம்ம சக்தி, மாடசாமி, ஜெயக்குமாா் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா உள்பட பலா் பங்கேற்றனா்.