நாலுமாவடியில்இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்
By DIN | Published On : 09th December 2022 10:21 PM | Last Updated : 09th December 2022 10:21 PM | அ+அ அ- |

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனை, மதுரை குரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையுடன் இணைந்து இலவச புற்றுநோய் கண்டறியும் முகாமை நாலுமாவடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அன்புராஜன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் ராஜகுமாரி வரவேற்றாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் முகாமை தொடங்கிவைத்தாா்.
முகாமில் மேமோகிராம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, இ.சி.ஜி, எக்கோ காா் டியோ கிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாலுமாவடி பகுதியை சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். இம்முகாம் சனிக்கிழமையும் (டிச.10)நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறாா் ஊழிய நிறுவன பொதுமேலாளா் செல்வக்குமாா் , மருத்துவமனை ஊழியா்கள் செய்துள்ளனா்.