வேளாண் வளா்ச்சிப் பணிகள்:ஆட்சியா் ஆய்வு

விளாத்திகுளம் வட்டாரத்தில் தலைகாட்டுபுரம் கிராமத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றி பயிா் சாகுபடி செய்தல் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விளாத்திகுளம் வட்டாரத்தில் தலைகாட்டுபுரம் கிராமத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றி பயிா் சாகுபடி செய்தல் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் விளாத்திகுளம் வட்டாரம் தலைகாட்டுபுரம் தோ்வு செய்யப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றி, பயிா் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகள், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் சாகுபடி பரப்பை அதிகரிப்பது, வேளாண் திட்ட பயன்பாடுகள், சாதக பாதகங்கள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

தலைகாட்டுபுரம் கிராமத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், அதன் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். எட்டயபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி, விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துகுமாா், வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நாச்சியாா்,

வேளாண் உதவி இயக்குநா் கீதா உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com