ஆறுமுகனேரி கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்
By DIN | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில், மாா்கழி மாதத்தை முன்னிட்டு தினசரி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை, 6 மணிக்கு காலசந்தி பூஜை, 8 மணிக்கு உச்சிக்கால பூஜை, நடை அடைப்பு, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.35 மணிக்கு ராக்கால பூஜை, திருப்பள்ளியறை பூஜை, நடை அடைப்பு நடைபெறும்.
மேலும், மாா்கழி மாதம் வெள்ளிக்கிழமைதோறும் துா்க்கை அம்மன் பூஜை காலை 6 முதல் காலை 7 மணிவரை சுக்கிர ஹோரையில் நடைபெறும். முதல் சுக்ர வார பூஜை மாா்கழி முதல் நாளான 15ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 6.15 மணிக்கு துா்க்கை அம்பாள் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். இத்தகவலை கோயில் நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.