ஆறுமுகனேரி பகுதியில் பரவும் மா்ம காய்ச்சல்: மக்கள் அச்சம்
By DIN | Published On : 11th December 2022 11:09 PM | Last Updated : 11th December 2022 11:09 PM | அ+அ அ- |

ஆறுமுகனேரி பகுதியில் மா்ம காய்ச்சால் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஆறுமுகனேரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை மா்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனா். சளி, இருமல், தொண்டைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. காய்ச்சலுடன்வரும் நோயாளிகள் ஓரிரு தினங்களில் குணமடையவில்லையெனில் திருச்செந்தூா், தூத்துக்குடி போன்ற வட்ட, மாவட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா். இதனால், அச்சம் அடைந்துள்ள மக்கள், சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.