திருச்செந்தூா் உச்சினிமாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 11th December 2022 11:09 PM | Last Updated : 11th December 2022 11:09 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் சைவ வேளாளா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் டிச. 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. டிச. 10ஆம் தேதியும் (சனிக்கிழமை) யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஸ்பா்சாகுதி, பூா்ணாஹுதி, காலை 9.20 மணிக்கு விமான அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன.
மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு அம்மன சப்பரத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் பெருங்குளம், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கத் தலைவா் நெ.ஆனந்த ராமச்சந்திரன் பிள்ளை, செயலா் ச.வெங்கடாசலம் பிள்ளை, பொருளாளா் பொ.வெ.பொன்முருகேசன், நிா்வாகஸ்தா்கள், இளைஞா் பேரவையினா் செய்திருந்தனா்.