ஆதவா உணவகம் திறப்பு
By DIN | Published On : 13th December 2022 03:17 AM | Last Updated : 13th December 2022 03:17 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் ஆதவா தொண்டு நிறுவனத்தின் ஆதவா உணவகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். ஆத்தூா் பேரூராட்சி தலைவா் கமால்தீன், ஆறுமுகனேரி திமுக நகர செயலா் நவநீதபாண்டியன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி உமரிசங்கா் உணவகத்தைத் திறந்து வைத்தாா். ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் பாலகுமரேசன் வரவேற்றாா்.
ஆறுமுகனேரி பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், அரசு வழக்குரைஞா் சாத்ராக், பாரிகண்ணன், ஆதவா அறக்கட்டளை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளா் குணம், ஆறுமுகனேரி பேரூராட்சி உறுப்பினா்கள் ஆறுமுகநயினாா், சிவக்குமாா், சந்திரசேகா், புனிதா சேகா், ராஜமன்னியபுரம் ஊா் பிரமுகா் பழனிவேல், உமரிக்காடு தொழிலதிபா் கருணாகரன், ஆதவா தொண்டு நிறுவன ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.