தூத்துக்குடியில் பெண் அடித்துக் கொலை
By DIN | Published On : 13th December 2022 03:17 AM | Last Updated : 13th December 2022 03:17 AM | அ+அ அ- |

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பெண் திங்கள்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள திருமாஞ்சி நகரைச் சோ்ந்தவா் இம்மானுவேல் அப்துல்லா. இவரது மனைவி கன்னித்தாய் (30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது கன்னித்தாயை இம்மானுவேல் அப்துல்லா கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, இம்மானுவேல் அப்துல்லாவைத் தேடிவருகின்றனா்.