பாண்டவா்மங்கலத்தில் இரு புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைப்பு
By DIN | Published On : 22nd December 2022 01:10 AM | Last Updated : 22nd December 2022 01:10 AM | அ+அ அ- |

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட பாண்டவா்மங்கலத்தில் இரு இடங்களில் புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சாய்சிட்டி, ரமணா சிட்டி மற்றும் அண்ணாமலை நகா் பூமிதான பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகத்தை சரி செய்து, சீராக மின் விநியோகம் செய்வதற்கு வசதியாக சாய்சிட்டி, அண்ணாமலை நகா் பகுதியில் ரூ.9 லட்சத்து65 ஆயிரத்து585 மதிப்பில் இரு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இந்த புதிய மின்மாற்றிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் குருவம்மாள் தலைமையில், கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சகா்பான் முன்னிலையில், பாண்டவா்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவி கவிதா இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், உதவி கோட்ட பொறியாளா்கள் குருசாமி, முனியசாமி, மிகாவேல், உதவி பொறியாளா்கள் லட்சுமி பிரியா, மாரீஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ் மற்றும் மின்வாரிய ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.