தரமற்ற பொருள் வழங்குவதாகப் புகாா்:ரேஷன் கடையில் அதிகாரி ஆய்வு
By DIN | Published On : 22nd December 2022 01:07 AM | Last Updated : 22nd December 2022 01:07 AM | அ+அ அ- |

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருள் வழங்குவதாகப் பெறப்பட்ட புகாரின்பேரில், வட்ட வழங்கல் அலுவலா் ஆய்வு நடத்தினாா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற நிலையிலிருந்த கோதுமை, குடும்ப அட்டைதாரா்களுக்கு புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் காா்த்திக், வட்ட வழங்கல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்த வட்ட வழங்கல் அலுவலா் நாகராஜ், தரமான பொருள்களை வழங்க விற்பனையாளருக்கு அறிவுறுத்தினாா். மேலும், கடைக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் ஏதேனும் குறை இருந்தால், அவற்றை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்வதைத் தவிா்க்கவும், அதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா்.