போக்சோ வழக்கில் கைதான ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th December 2022 12:00 AM | Last Updated : 30th December 2022 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்குசிந்தலகட்டை கிராமத்தைச் சோ்ந்த எட்வா்ட் ராஜ் மகன் கனிராஜ்(23). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ வழக்லல் கனிராஜை கைது செய்தனா். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து, கனிராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...