சாத்தான்குளம் டிஎன்டிடிஏ தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார மேற்பாா்வையாளா் ஜாண்சன் ஜெபக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தன்னாா்வலா்களுக்கு இல்லம் தேடிக் கல்வி ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் அன்பாய் செல்வம், சப்திகா, ஆசிரியா் பயிற்றுநா்கள் ரஞ்சித், சாரா ஆகியோா் பயிற்சி அளித்தனா். பின்னா் தன்னாா்வலா்கள் தயாரித்த கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்று வட்டார பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.
இதில் சாத்தான்குளம் ஒன்றியத்தில் பணிபுரியும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.