கொட்டங்காடு ஆலய பிரதிஷ்டை விழா
By DIN | Published On : 27th February 2022 05:29 AM | Last Updated : 27th February 2022 05:29 AM | அ+அ அ- |

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்திற்குள்பட்ட கொட்டங்காடு தூய மத்தியா ஆலயத்தின் 98 வது பிரஷ்டை விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது.
பிப்.24 ஆம் தேதி ஓய்வு பெற்ற சபை குரு பொன்னு சாமியின் சிறப்பு செய்தி, பிப்.25 ஆம் தேதி பிரதிஷ்டை ஆராதனை, அசன விருந்து நடைபெற்றது. இதில் நாசரேத் பாடகா் குழு தலைவா் உலகராஜ், பிரேமா டிட்டோ, திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் ஞானதேசிகா், கனகராஜ், செயலா் ராஜ்குமாா் பாண்டியன் உள்பட சபை மக்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சேகர தலைவா் ஜான்சாமுவேல், ஊழியா் லிவிங்ஸ்டன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.