திருச்செந்தூரில் சிறுமியை கா்ப்பமாக்கியவா் கைது
By DIN | Published On : 27th February 2022 05:21 AM | Last Updated : 27th February 2022 05:21 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டாடத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியின் (15 தந்தை, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால், அவரது தாயாா் அதே பகுதியை சோ்ந்த கட்டட தொழிலாளி முத்துக்குமாரை(45) திருமணம் செய்து வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்தி வந்த முத்துக்குமாா், வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதன்பிறகு பலமுறை இதே மாதிரி சிறுமியிடம் நடந்துள்ளாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாம். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த போது, மூன்று மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனா்.