வளாக நோ்காணல்: 6 பேருக்கு பணி நியமன ஆணை
By DIN | Published On : 27th February 2022 05:26 AM | Last Updated : 27th February 2022 05:26 AM | அ+அ அ- |

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாங்குநேரியில் உள்ள பன்னாட்டு நிறுவனம் சாா்பில் மெக்கானிக்கல் துறையில் படித்து வரும் மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில் 3 ஆம் ஆண்டு பயிலும் 85 மாணவா்கள் கலந்து கொண்டனா். அந் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கோபால் சா்மா, தயாரிப்புத்துறை இயக்குநா் லட்சுமணன் ஆகியோா் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்ட வளாக இந்த நோ்காணலில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த 6 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் ஆலோசனையின் படி, கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைவா் ராஜாமணி, உதவி அலுவலா் மேல்முருகன் மற்றும் துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.