திமுக அரசைக் கண்டித்து, தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 28) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுகவின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ (வடக்கு மாவட்டம்) ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் திமுக அரசு தோ்தல் முறைகேடுகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது திமுக அரசு பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விவிடி சிக்னல் அருகே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.