எட்டயபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th January 2022 08:53 AM | Last Updated : 26th January 2022 08:53 AM | அ+அ அ- |

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் கல்வி பயின்ற ராஜா மேல்நிலைப்பள்ளியை அரசுடமையாக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக ஒன்றிய தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆத்திராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் கல்வி பயின்ற ராஜா மேல்நிலைப்பள்ளியை அரசுடமையாக்க வேண்டும். பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பனை செய்த கிரைய ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும். எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களை உள்ளடக்கி புதிதாக ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டுனா். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...