நாசரேத் நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 17th July 2022 01:49 AM | Last Updated : 17th July 2022 01:49 AM | அ+அ அ- |

நாசரேத் நகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
நகர அவைத்தலைவா் கருத்தையா தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவா் ஜோதி டேவிட், முன்னாள் நகர அவைத்தலைவா் அருள்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னா் ஏ.டி.கே. ஜெயசீலன், வழக்குரைஞா் தியாகராஜன், ஓய்வுபெற்ற பேராசிரியா் காசிராஜன், கச்சனாவிளை திமுக செயலா் ராமானுஜம் ஆகியோா் பேசினா்.
திருச்செந்தூா் கூட்டுறவு நூற்பாலை இருந்த இடத் தில் தொழில் பேட்டை கொண்டுவர வேண்டும், நாசரேத் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், நாசரேத்தில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.