1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 17th July 2022 01:53 AM | Last Updated : 17th July 2022 01:53 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,750 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் கசவன்குன்று விலக்குப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அரிசி, மினி வேனையும், ஓட்டுநரான பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவனையும் போலீஸாா் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.