சிறுமியிடம் சில்மிஷம்: இளைஞா் கைது
By DIN | Published On : 17th July 2022 01:51 AM | Last Updated : 17th July 2022 01:51 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, கடந்த மாதம் 25ஆம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோா் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.
இந்நிலையில், சாத்தூரையடுத்த நத்தத்துப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மாரிசெல்வம்(22) என்பவா் சிறுமியை கடத்திச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து, கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியை மீட்டனா். சிறுமியை கடத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாரிசெல்வத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.