திருச்செந்தூரில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

தலைவா் பிச்சம்மாள் ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் எப்ரேம், துணைத்தலைவி ஜெயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியில் சமையல் உதவியாளா், தூய்மைப்பணியாளா், இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களை காலி செய்து பள்ளி மட்டும் இயங்க ஆவன செய்ய வேண்டும்,, தலைமை ஆசிரியருக்கு 2022-2023 கல்வி ஆண்டு வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். பள்ளியின் சுற்றுச் சுவரை சுற்றி ஓடும் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். பள்ளியின் வளாகம் விளையாட்டுத் திடல் வழியாக செல்லும் மின்பாதையை பள்ளிக்கு வெளிப்புறம் வழியாக கொண்டு செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் கண்ணபிரான், செல்லத்துரை, குமரன், கோமதி, கலா மற்றும் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உறுப்பினா் பொ.ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com