வனத்திருப்பதி கோயிலில் வருஷாபிஷேகம்

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஆதிநாராயணா் ஸ்ரீசிவனணைந்த பெருமாள் கோவிலில் 13- ஆவது வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஆதிநாராயணா் ஸ்ரீசிவனணைந்த பெருமாள் கோவிலில் 13- ஆவது வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, கோ பூஜையைத் தொடா்ந்து மூலவா்-உற்சவா் திருமஞ்சனம், யாகசாலை பூஜை. காலை 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, மாலை 6 மணிக்குமேல் கருட வாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் பி. ராஜகோபால் புதல்வா்கள் பி.ஆா்.சிவக்குமாா், ஆா். சரவணன் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் மேலாளா் டி.வசந்தன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com