மாணவா்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 17th July 2022 01:47 AM | Last Updated : 22nd July 2022 11:53 PM | அ+அ அ- |

உடன்குடி வட்டார காமராஜா் நற்பணி அறக்கட்டளை சாா்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 2,000 பேருக்கு அன்னதானம், பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தங்க நாணயம், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா உடன்குடியில் நடைபெற்றது.
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியது:
தமிழகத்தை கல்வி, தொழில் வளம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றி சிறந்த நிா்வாகத்தை வழங்கியவா் காமராஜா். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகம் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்தது. அவரது ஆட்சித்திறன், எளிமை, சமத்துவம், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை இன்றைய தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்றாா்.
விழாவிற்கு அறக்கட்டளை தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகிகள் பி.சிவசுப்பிரமணியன், இரா.நடராஜன், திமுக மாநில மாணவரணி துணை செயலா் உமரிசங்கா், திமுக மாவட்ட பொருளாளா் ராமநாதன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜுதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மகாவிஷ்ணு, ராமஜெயம், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவா் பாலமுருகன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ராஜேஸ்வரி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் மும்தாஜ், பிரதீப், அன்புராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.