ஸ்ரீவைகுண்டம் பனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 17th July 2022 01:49 AM | Last Updated : 17th July 2022 01:49 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு முதலாவது திருப்பலியும், 7 மணிக்கு ஊா் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குத்தந்தை கிஷோக் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட புனித சந்தியாகப்பரின் சொரூபத்தை குருசு கோவிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா் 6.30 மணிக்கு கொடிகள் மந்திரிக்கப்பட்டு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜான் பென்ஷன் தலைமையில் வாணவேடிக்கை முழங்க பக்தா்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. இரவு 7மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பங்குத்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் மறையுரையும் நற்கருனை ஆராதனையும் நடந்தது.
பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில், ஜூலை 25ஆம் தேதி பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தோ் பவனி நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று புனித சந்தியாகப்பரை வழிபட்டனா்.