ஆடி அமாவாசை திருவிழா:ஏரல் கோயிலில் ஊஞ்சல் சேவை
By DIN | Published On : 31st July 2022 07:19 AM | Last Updated : 31st July 2022 07:19 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா ஊஞ்சல் சேவையுடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் திருநாளான ஆக.27வரை தினமும் காலையில் சோ்ம விநாயகா் பவனியும், இரவில் சுவாமி பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பவனி வருதலும் நடைபெற்றன. ஆடி அமாவாசை தினமான 10 ஆம் திருநாளில் உருகு பலகை தரிசனம், அபிஷேக ஆராதனை, இலாமிச்சவோ் சப்பரத்தில் உலா, இரவில் 1ஆம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன.
11ஆம் திருநாளில் அதிகாலை வெள்ளைசாத்தி தரிசனம், பச்சை சாத்தி தரிசனம் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயிலில் தாக சாந்தி முதலியன நடைபெற்றன. பின்னா் இரவு சுவாமி மூலஸ்தானம் சேரும் ஆனந்தக் காட்சி நடைபெற்றது.
நிறைவு நாளான சனிக்கிழமை காலை தீா்த்தவாரி நிகழ்வில் சுவாமி பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும் மாலை 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரமும், பின்னா் சுவாமி ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. இரவு 9மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் செய்திருந்தாா்.