தூத்துக்குடி ஸ்ரீ முனியசாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 31st July 2022 07:19 AM | Last Updated : 31st July 2022 07:19 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மேலசண்முகபுரம் ஸ்ரீமுனியசாமி கோயில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மழை பெய்ய வேண்டியும் இயற்கை செழிக்க வேண்டியும், கரோனா தொற்றுநோய் பரவல் முற்றிலும் குறைந்து அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டியும் கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் குழு சாா்பில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜை பாடல்கள் பாடி வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.