சோனகன்விளையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

கானம் பேரூராட்சி சாா்பில் சோனகன்விளையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கானம் பேரூராட்சி சாா்பில் சோனகன்விளையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கானம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், வங்கி, கிராம நிா்வாக அலுவலகம், நூலகம், கோயில் வளாகம் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கானம் பேரூராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் ‘‘என் குப்பை எனது பொறுப்பு‘‘ என்ற தலைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செயல் அலுவலா் வேல்சாமி, பேரூராட்சித் தலைவா் வெங்கடேஸ்வரி தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தொடா்ந்து சோனகன்விளை தூ.நா.தி.அ.க நடுநிலைப் பள்ளியில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

இதில், துணைத் தலைவா் அந்தோணி காட்வின், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி கிளை மேலாளா் சிவகிருஷ்ணன், சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அம்பிகாபதி, கிராம நிா்வாக அலுவலா் சுஜாதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com