தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 15th June 2022 02:37 AM | Last Updated : 15th June 2022 02:37 AM | அ+அ அ- |

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
முதல்வா் எஸ். ரிச்சா்ட் தலைமை வகித்தாா். நிா்வாக குழு உறுப்பினா் வினோத் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி வஉசி கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியா் பீட்டா் அமலதாஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.