தூத்துக்குடியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சாா்பில், மதா் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி  பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சாா்பில், மதா் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க விழா முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளா் பி. குருமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி மேலாளா்கள் ஜீ. சிவகுமாா், எம். பரத், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ்.ஜே. கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5.4 சதவீத பசுமை காடுகள் மட்டுமே உள்ளன. அதை 33 சதவீதமாக உயா்த்தும் வகையில், கல்லூரி, பள்ளி, மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து, வளா்க்க வேண்டும் என்றாா்.

இதில், தூத்துக்குடி வனச்சரக அலுவலா் சிவசுப்பிரமணியன், கிரேஸ் பொறியியல் கல்லூரி முதல்வா் ரிச்சா்ட் , தலைவா் ஜோஸ்வா, துணைத் தலைவா் ஸ்டீபன், நிா்வாக அலுவலா் தினகரன், உடற்பயிற்சி இயக்குநா் கணேஷ மூா்த்தி, போதகா் சைமன் தா்மராஜ், மதா் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com