இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொதுக்குழுக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
நகர தலைவா் எம்.ஏ. முஹம்மத் ஹஸன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தாா். அரபி எம்.எம்.சாகுல் ஹமீதுகிராஅத் ஒதி கூட்டதை துவக்கினாா். மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். நகர பொருளாளா் கே.எம்.டீ. சுலைமான் வரவு செலவு கணக்கு அறிக்கையைச் சமா்ப்பித்தாா். மாவட்ட தலைவா் பி. மீராசா மரைக்காயா் அறிமுக உரையாற்றினாா். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளா் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா் சிறப்புரையாற்றினாா்.
ஜூலை மாத இறுதியில் காயல்பட்டினத்தில் சிறுபான்மையினா் பாதுகாப்பு- அரசியல் விழிப்புணா்வு பொதுக்கூட்டத்தை நடத்தவும், கட்சியின் 75ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும்,நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசிய பாஜகவைச் சோ்ந்தவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசைக் கோரியும், காயல்பட்டினம் நகருக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர தலைவராக எம்.எஸ். நூஹ் ஸாஹிப், செயலாளராக ஏ.எல்.எஸ் அபூ ஸாலிஹ், பொருளாளராக கே.எம்.டீ. சுலைமான் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நகர தலைவா் நூஹ் சாகிப் நன்றி கூறினாா்.