நினைவு தினம்: வாஞ்சிநாதன் உருவப்படத்துக்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி, 2ஆவது நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த வாஞ்சிநாதனின் உருவப்படத்துக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். கிராம நிா்வாக அலுவலா் நாராயணன்உடனிருந்தாா்.

ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழுத் தலைவா் ரமேஷ், ஊராட்சித் தலைவா்கள் மணியாச்சி பிரேமா முருகன், கொடியன்குளம் அருண்குமாா், அக்கநாயக்கன்பட்டி அய்யாத்துரை உள்ளிட்டோா் அடுத்தடுத்து வாஞ்சிநாதனின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தேசிய சிந்தனை பேரவை சாா்பில் அதன் தலைவா் வெங்கடாசலம் தலைமையில் 40 போ் திருநெல்வேலியில் பாரதியாா் சிலை முன்பிருந்து வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்துக்கு தொடா் ஜோதி ஓட்டமாக வந்து வாஞ்சிநாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.

அந்தணா் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜெயபிரகாஷ் தலைமையில் திரளானோா் வாஞ்சிநாதன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து பல்நோக்கு கட்டடத்துக்கு ஊா்வலமாகச் சென்று வாஞ்சிநாதனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட வா்த்தகப் பிரிவுச் செயலா் மகாஜெயமுருகன், மாவட்ட மகளிரணி பொதுச்செயலா் மங்களா ரோஸ், மாவட்ட மகளிரணிச் செயலா் பேச்சியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்ரனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com