புகையிலைப் பொருள்கள்விற்பனை: ஒருவா் கைது
By DIN | Published On : 17th June 2022 01:25 AM | Last Updated : 17th June 2022 01:25 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்ாக ஒரு வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கொப்பம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் துரைச்சாமி தலைமையில் முடுக்கலாங்குளம் பகுதியிலுள்ள கடைகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, நடுத் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான கந்தசாமி மகன் க.காளீஸ்வரன்(56) என்பவரை கைது செய்தனா்.